காதலின் மீதியோ நீ-22
காதலின்மீதியோ நீ-22
நித்ரா இதை சொல்லிமுடித்ததுமே ஆயுஷ் இவ்வளவு மோசமான கொடூரனா தனது தந்தை என்பதை கிரகித்துக்கொள்ள முடியாது அதிர்ந்து அவரைத் திரும்பிப் பார்த்தான்.
பூர்விக்கோ இதெல்லாம் பரம்பரை பரம்பரையாக பெரும் பணக்காரராக இருக்கும் தன்னுடைய குடும்பங்களில் சகஜம் என்பது போல் நின்றிருந்தார்.
பிரீத்தி தான் தனது தந்தையிடம் போய் “உங்க மகனை காதலிச்சு உங்க மகனோட வாழனும் நினைச்ச ஒரு பாவப்பட்டப் பொண்ணை இப்படி கொடூரமா கொடுமைப் பண்றதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? நீங்க எல்லாம் மனுசனா?” என்று கேள்வி கேட்டாள்.
பூர்வி”பிரீத்தா இதெல்லாம் உங்களுக்கு புரிஞ்சுக்க முடியாது. அதை புரிஞ்சுக்கணும்னா நம்ம குடும்பத்தை பற்றியான எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும். நடந்தது நடந்துப் போச்சு இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் .அவங்கவங்க ரூமுக்குள்ள போங்க” என்று போது எல்லாரையும் விரட்டினார்.
“மம்மீ உன் மகனையும் மருமகளையும் பார்த்தால் பாவமாக இல்லையா?”என்று ஆயுஷ் கேட்டதும் அவருக்கே கண்கள் கலங்கிவிட்டது.
“உங்க அப்பா இதுவரைக்கும் செய்தது நான் உங்ககிட்ட சொல்லி இருக்கேன் இந்த கல்யாணம் முடிஞ்சு வந்ததுக்கப்புறம் உங்க அப்பா என்கிட்ட தனியா மிரட்டிச் சொன்னது என்ன தெரியுமா?”என்று நித்ரா ஆயுஷிடம் கேட்டாள்.
“நான் உங்கக்கூட படுக்கையில் இருக்கக்கூடாதுன்னு நேரடியாகவே சொன்னார். உங்க கூட நான் ஒரு மனைவியாக வாழ்ந்தா குழந்தை வந்துருமாம் நான் இங்கயே நிரந்தரமா தங்கிடுவேனோன்னும் உங்க அப்பா பயந்தார்.
அதைவிட இங்க இருந்து நான் போகணும் சொன்னார்.அதுக்குமே மிரட்டினார்.
எவ்வளவு சீக்கிரம் போகணுமோ அவ்வளவு சீக்கிரம் போகணும்னு மிரட்டினார். உங்களுக்கு ரிச்சாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க என்னை போகச்சொல்லி மிரட்டினார். கொலை பண்ணிடுவேன்னும் மிரட்டினார். எனக்கு அதெல்லாம் கூட பிரச்சனை இல்லை .நீங்க என்ன புரிஞ்சிக்கல என்னை வேதனை படுத்திட்டு இருக்கீங்க. ஏற்கனவே நான் உங்ககிட்ட இருந்து விலகி போக தான் நினைச்சுட்டிருந்தேன். என்னால் நீங்களும் சந்தோசமாகவும் இல்ல நிம்மதியாகவும் இல்ல .ஆனால் ஏற்கனவே உங்கப்பா என்னை மிரட்டி உங்களிடமிருந்து பிரிந்துப்போகச் சொல்லும்போதே எனக்கு நாள் தள்ளிப்போய் இருந்தது. நான் அப்போதே கர்ப்பமாகத்தான் இருந்தேன்” என்றதும்தான் ஆயுஷ் எச்சில் விழுங்க முடியாதளவுக்கு துக்கத்தில் அதிர்ச்சியோடு அப்படியே தலையில் கைவைத்து அவளது கையைப் பிடித்துக்கொண்டு அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
உண்மையில் ஆயுஷ் இதையெல்லாம் கேட்டு மொத்தமாக உடைந்தே போனான். என்னவெல்லாம் என்னைக் காதலித்த குற்றத்திற்காகா தாங்கிக் கொண்டிருந்திருக்கிறாள்?
அவன் தனது முன்பு மண்டியிட்டு தனது கையை பிடித்து இருக்கிறான் என்றதும் நித்ரா உடனே அவன் முன்பு உட்கார்ந்தவள் அவனது முகத்தை தாங்கி தனது நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.
பிரீத்தா இப்போது “டாடி உங்க தந்தை பாசத்தைவிட அவனது தந்தை பாசம் இப்போ ஜெயித்திருருக்கு. நீங்க இனி என்னதான் செய்து தலைகீழாக நின்னாலும் அவங்ககிட்ட இருந்து பாசத்தை நீங்க வாங்கி விட முடியாது. நீங்க தோத்து போயிட்டீங்க. ஒரு அப்பாவா மட்டுமல்ல ஒரு மனுசன தோத்துப்போயிட்டீங்க. ஆனால் அதுல நானும் சம்பந்தப்பட்ட ஆளும் தப்பிச்சுட்டோம். ஆனா நீங்க இப்போ அண்ணனுக்கு அண்ணிக்கும் செய்தது துரோகம்.பெத்த மகனை முதுகுல குத்திட்டீங்க. இதுக்கு மேல நீங்க அவங்கள பிரிக்கணும் நெனச்சீங்கன்னா அது அவங்க செத்தாதான் நடக்கும் இல்லல்ல அவங்க செத்தாக்கூட ஒண்ணாதான் சாவாங்க. அதுலக்கூட உங்களால அவங்களைப் பிரிக்க முடியாது” என்று தனது அண்ணனுக்காக பேசினாள்.
நித்ராவின் கண்ணீர் அவனது தலையில் விழுந்து நனைக்க,ஆயுஷின் கண்ணீரோ அவளது நெஞ்சை நனைத்தது.
ஆய்ஷுக்குத் தெரியுமே “எவ்வளவு வலிக்க வலிக்க அவளைக் கொடுமைப் படுத்தியிருக்கிறேன். அதையும் தாங்கிக்கொண்டு எனக்கான காதலை நெஞ்சிலும் என் உயிரை வயிற்றிலும் சுமந்துக்கொண்டிருந்திருக்கிறாளே!இதற்கு ஈடாக நான் என்ன செய்திடமுடியும்!”என்று நொந்து வருந்தினான்.
குப்தா இப்போதும் அதே கம்பீரத்துடன்” இப்பவும் நான் ஆயுஷிடமிருந்து நித்ராவை போக சொல்றேன். எந்த சூழ்நிலையிலும் நித்ரா இந்த வீட்டில் மருமகளாக வாழ முடியாது. இந்த வீட்டு வாரிசை அவள் பெத்துக்கவும் கூடாது. நான் சொன்னது சொன்னதுதான் இப்பவே நித்ராவைக் கூட்டிட்டுபோய் ஹாஸ்பிடல்ல சேர்த்து அந்த குழந்தை இல்லாம பண்ணிடுங்க. பூர்வி நித்ராவை நீயே கூட்டிட்டு போய் நம்ம குடும்ப டாக்டர் காண்பிச்சுடு,செய்யணுமோ அதைச் செய்திடு. ஆயுஷ்கிட்ட கையெழுத்தை மட்டும் வாங்கிக்கோ. அவன் இதற்குச் சம்மதிப்பான். என் மகன் நான் சொன்னால் கேட்பான்” என்று இப்பொழுதும் கட்டளையிட்டுச் சொன்னார்.
பூர்வி இந்த ஒரு விஷயத்தில் கணவன் சொன்னதை கேட்காமல் அப்படியே குனிந்தத் தலைநிமிராது அமைதியாக நின்றிருந்தார்.
ஆயுஷோ நித்ராவை சமாதானப்படுத்தி உட்கார வைத்துவிட்டு எழுந்து தனது தந்தையின் முன்பாக வந்துநின்றான்.
“என் குழந்தையை பெத்தெடுக்க போறது என் பொண்டாட்டி அந்த குழந்தை வேணுமா வேண்டாமான்னு முடிவெடுக்கிறது எனக்கும் என் பொண்டாட்டிக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. இதுல மூணாவது மனுஷனான நீங்க தலையிடக்கூடாது என் அப்பாவாக இருந்தாலும் எங்க வாழ்க்கையை முடிவு செய்ய நீங்க யாரு? உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது . அவளை கொலை செய்திருவேன்னு மிரட்டிருக்கீங்க. ஆனால் இன்னைக்கு வரைக்கும் ஒரு வார்த்தை கூட உங்களைப் பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல. அவள் மனசுல நீங்க எல்லாம் மனசு ஜென்ம கிடையாதுன்னு நினைச்சிட்டா. இந்த வீட்ல தான் நான் இருப்பேன் .இது எங்க தாத்தா சொத்து. நீங்க இல்ல இங்க எவனும் என்னை கேட்க” முடியாது என்றவன் நித்ராவை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் போனான்.
டாக்டர் மித்ராவை பரிசோதித்துவிட்டு ஐந்து மாதம் முடியப் போகுது இன்னும் வயிறே தெரியலையே. இதுவரைக்கும் மாத்திரை மருந்து ஒழுங்காக சாப்பிட்டாங்களான்னு தெரியலையே! ரொம்ப மோசமாக மனைவியை பார்த்திருக்கீங்க கர்ப்பிணி பெண்ணை எவ்வளவு சந்தோஷமாகவும் எவ்வளவு சத்தாகவும் வைச்சிருக்கணும். இப்படியா கவனிச்சிப்பாங்க? என்று திட்டினார்.
அதன்பின் ஸ்கேன் எல்லாம் எடுத்து அதை அவன் கையில் கொடுத்தார். அதைப் பார்த்தவனுக்கு வேதனையோடான ஒரு மகிழ்ச்சி.தன் குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்டான். அங்கயே உடைந்து நொறுங்கிக் கலங்கிவிட்டான்.
இப்போது நேராக நித்ராவை அழைத்துக்கொண்டு கமிஷனர் ஆபிஸிற்கு சென்றவன் தனது அப்பாவால் தனக்கும் தனது மனைவிக்கும் உயிருக்கு ஆபத்து இருக்கிறது அவரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று புகார் அளித்துவிட்டு தனது மாமாவிடம் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொன்னான்.
பாதுகாப்பிற்காக என்னென்ன ஃபார்மலிட்டிஸ் உண்டுமோ எல்லாத்தையும் செய்து முடித்துவிட்டுத்தான் வெளியே வந்தான்.
அந்த நிமிடம் வரைக்கும் நித்ரா அவனிடம் எதுவுமே பேசவில்லை அவனை அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்தாளே தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லை
அவன் என்னலாம் சொன்னாலும் அதை எல்லாம் கேட்டு செய்தாளே தவிர வேற வார்த்தைகளே அவனிடம் பேசவேயில்லை.
நரேஷ் குப்தா ஆயுஷும் அவனது மனைவி மித்ராவும் வந்து ஜெகன்ன்த் குப்தாவிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமென்று ரெக்வஸ்ட் கொடுத்ததிருக்காங்க என்று தனது அக்கா பூர்வியிடம் சொல்லி இருந்தார்
அதான் கவனமா இருங்க உங்க மகனே உங்களுக்கு எதிராக நிற்கிறான். நீங்கள் இனி என்ன செய்தாலும் அது உங்களுக்கு எதிராகவே போகும் என்று எச்சரித்ததினால் குப்தா ஒன்றும் செய்ய முடியாது தன்னை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
ஆனாலும் நித்ராவின் மேலுள்ள கோபம் இன்னும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது. ஒரு லோக்கல் மிடில்கிளாஸ் பொண்ணு என் வீட்டு மருமகளா! இங்கே எப்படி வாழ்வான்னு நானும் பார்க்கிறேன் என்று வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டிருந்தார்.
இருவரும் வீடு வந்து சேரவும் எல்லோரும் அவர்களைத்தான் அதிசயமாக பார்த்திருந்தனர் ஆனால் ஆயுஷ் யாருடோவும் பேசாது தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
அறைக்குள் சென்றதும் நித்ராவை ஆசைத்தீர ஆரத் தழுவிக்கொண்டான். அவன் என்னவெல்லாம் செய்கிறானோ அதற்கு தன்னை ஒப்புக்கொடுத்து அப்படியே நின்றிருந்தாள்.
அவளை தனது கைவளைவிலயே வைத்திருந்தான்.இரவும் அவளை அணைத்துக்கொண்டுதான் படுத்திருந்தான்.
அவளோ அடிக்கடி அவனது கண்களையே பார்த்திருந்தாளே தவிர இப்போதும் அவனிடம் எதுவுமே பேசவில்லை. அவன் எதிர்பார்த்தான்.நித்ரா தன்னோடு பேசுவாள் சிரிப்பாள் என்று பல கனவோடு அவளிடம் நெருங்கி நெருங்கிப்போனான்.
பலமாதங்கள் பட்ட வலியை ஒரேநாளில் அவளால் எப்படி மறக்க முடியும்? இதை ஆயுஷும் எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் அவனது மனது குற்ற உணர்ச்சியில் துடித்தது.
தப்பே பண்ணாத ஒருத்தி என்னை உயிராக நேசித்து என் குழந்தை வயிற்று சுமக்கிறவளை நான் எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கிறேன் என்ற வலி வேதனை அவனை வாட்டியது .
அது நித்ராவுக்கும் புரிந்து இருந்தது. அதனால்தான் அவள் அமைதியாக அவனது கண்களையே பார்த்து பார்த்து கவனித்திருந்தாள்.
ஆயுஷ் அவளை எவ்வளவுக்கு எவ்வளவு வேதனைப் படுத்தினானோ அதைவிட பன்மடங்கு உயிருக்குள் பொத்தி வைத்து நேசிக்க ஆரம்பித்தான்.
ஆனால் நித்ரா அவனோடு பேசவேயில்லை.அதனால் மன பாரத்தோடு அவளிடம் மனந்திறந்துப் பேசினான்.
அடுத்தநாள் காலையில் எல்லோரின் முன்பும் அவளை அழைத்து வந்து நிறுத்தியவன் “இவதான் என் பொண்டாட்டி இங்க நம்ம வீட்ல என் கூட வாழ வந்து இருக்காள். காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் எங்க அப்பா செய்த மோசடி பிராப்ளம் எல்லாமே இங்க எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கும் .இதே மாதிரி இந்த வீட்டிலேயே நாங்க இருக்கிறதுக்கு வேற யாருக்கும் பிரச்சினையாக இருந்தால் சொல்லிருங்க நாங்க வெளியேபோக மாட்டோம் நீங்களே வெளியே போயிடுங்க .ஏன்னா இது என்னோட தாத்தா சொத்து பரம்பரை சொத்து நான் என் பொண்டாட்டியோட இங்கதான் வாழ்வேன் .என் பிள்ளைங்க இங்கதான் பிறந்து வளரும். அதைக் கேட்க யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது” என்று பேசியவன் தனது மனைவிக்காக நின்று தனது காதல் மனைவிக்காக பேசினான்.
இப்போதும் நித்ரா அமைதியாகவே நின்றாள்.ஒரு நிலையில் அவளது மௌனத்தை பார்த்து சோர்ந்து போனவன் அவளிடம் நேரடியாகவே கேட்டான் .
அவளது கன்னங்களை தனது கைகளில் தாங்கி கண்கள் கலங்க “ஏன் நித்ரா என்கிட்ட பேச மாட்டேங்கிற?” என்று குரல் தழுதழுக்க ஒரு சிறு குழந்தை போல அவளிடம் காதலை யாசித்து நின்றிருந்தான்.
ஆனால் நித்ரா அவனுக்கு காதல் கொடுப்பதற்கு பதிலாக இன்னும் அவனது இதயத்தை துண்டாக்கும் வார்த்தைகளை பேசினாள்.
அவள் பேசியது ஒன்றே ஒன்றுதான் நான் உங்கக்கிட்ட ஒன்னுக் கேட்பேன் எனக்கு அதை தருவீங்களா? என்று சாந்தமாக அமைதியாக கேட்டாள்.
“என்ன நித்து வேணும் நீ கேளு என்னனாலும் தர்றேன்”
“எனக்கு உங்கக்கிட்ட இருந்து விவாகரத்து வேணும். நான் உங்களிடமிருந்து விலகி இருக்கணும். எனக்கு அதுதான் நிம்மதியை கொடுக்கும் .உங்களுக்கும் அதுதான் நிம்மதியையும் சந்தோஷமான வாழ்க்கையும் கொடுக்கும். எனக்கு விவாகரத்து தாங்க” என்று நேரடியாகவே அவனிடம் கேட்டாள்.
இவ்வளவு பிரச்சனைகளிலிருந்தும், பிரச்சனைக்கு மூல காரணம் என்ன என்று எல்லாம் கண்டுபிடித்தும் அதை தீர்வுக்கு கொண்டு வந்தும் தன்னோடு வாழ்வாள் என்று அவன் கனவு கண்டிருந்தான்.
ஆனால் அவளோ எனக்கு விவாகரத்து வேண்டும் என்று ஒற்றை வார்த்தையில் அவனை மொத்தமாக சிதைத்திருந்தாள்!